
சிங்கத்திடம் தைரியத்துடன் போராடி மகனை காப்பாற்றிய வீரத்தாய்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மேற்கே உள்ளது சாண்டா மோனிகா மலைப் பகுதி. இங்கு கலாபசஸ் எனுமிடத்தில் தமது வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுவன் ஒருவனை மலைச் சிங்கம் தாக்கியது.பின்னர் அந்தச் சிறுவனைப் பிடித்து புல்வெளியில் தரதரவென்று இழுத்துச் சென்றது.
சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த தாய் அந்த மலைச் சிங்கத்தை நோக்கி ஓடினார். அந்தச் சிங்கம் குழந்தையைத் அதன் பிடியிலிருந்து விடும் வரை வெறும் கையாலேயே அதை அடித்தார். இதனால் சிங்கம் குழந்தையை விட்டுவிட்டு ஓடிவிட்டது. பின்னர் வனவிலங்கு அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்ட அந்த மலை சிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டது.
தலை மற்றும் உடல் பகுதிகளில் காயமடைந்த அந்தச் சிறுவனுக்கு லாஸ் ஏஞ்சலஸில் உள்ள ஒரு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுவனின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. தாய் சிங்கத்திடம் தீரமுடன் போராடி மகனை காப்பாற்றியுள்ளார்.