Category:
Created:
Updated:
இலங்கை அரசாங்கம் கொள்வனவு செய்த சீனாவில் உற்பத்தி செய்யப்படும் சைனோபார்ம் தடுப்பூசியின் மேலும் ஒரு மில்லியன் டோஸ்கள் இலங்கை கொண்டு வரப்பட்டுள்ளது.இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விசேட சரக்கு விமானம் ஒன்றில் சீனாவின் பீஜிங் தலைநகரில் இருந்து இன்று (24) அதிகாலை இந்த தடுப்பூசி தொகை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.இம்மாதம் இறுதிக்கு முன்னர் மேலும் இருபது இலட்சம் தடுப்பூசிகள் இந்நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.