
நுவரெலியா மக்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை
கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கத்தில் பெற்றுக்கொடுக்கப்படும் உலர் உணவு நிவாரணப்பொதி நுவரெலியா மாவட்டத்தில் இது வரை பெரும்பாலானவர்களுக்கு பெற்றுக்கொடுக்க தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் வழிகாட்டல்களுக்கமைய நுவரெலியா மாவட்டச் செயலாளரின் கவனத்திற்கு கொண்டு உடனடியாக நிவாரணப் பொதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உதவிச் செயலாளர் சச்சிதாநந்தன் தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்த அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில் நுவரெலியா மாவட்டத்தில் இன்று அதிகமானவர்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள் இதனால் பல நூறு குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
ஆகவே அவர்களுக்கு அரசாங்த்தினால் பெற்றுக்கொடுக்கின்ற நிவாரண பொதி உடனடியாக கிடைக்காததன் காரணமாக பல குடும்பங்கள் பவ்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.