
ஜனாதிபதி வழங்கியுள்ள ஆலோசனை : தயாராக இருக்குமாறு மக்களுக்கு இராணுவத் தளபதி அறிவித்தல்
கோவிட் தடுப்பூசியின் மூன்றாவது டோஸை பெற்றுக்கொள்ள தயாராக இருக்குமாறு நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை கோவிட் – 19 செயலணியின் பிரதானியான, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மக்களுக்கு மூன்றாவது தடுப்பூசி டோஸ் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆகையால், மூன்றாவது தடுப்பூசியையும் பெற்றுக்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும். இது தொடர்பில் தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு ஜனாதிபதியும் ஆலோசனை வழங்கியுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் கோவிட் தொற்று நிலைமையானது தீவிரமடைந்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் கடந்த 20ஆம் திகதி இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30ஆம் திகதி அதிகாலை வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் நாட்டில் தொடர்ச்சியாக கோவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.