Category:
Created:
Updated:
ராஜஸ்தானின் ஜலூர் மாவட்டத்தில் கட்டுமானம் நடந்த இடமொன்றில் தண்ணீர் தொட்டிக்கு குழி தோண்டும்போது, அந்த இடத்தில் திடீரென மண் சரிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஒரு குழந்தை உள்பட 5 பேர் புதைந்து போயுள்ளனர்.
இதுபற்றி தகவல் அறிந்து பேரிடர் பொறுப்பு படையினர் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் 5 பேரையும் மீட்டு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
எனினும், அவர்கள் உயிரிழந்து விட்டனர் என போலீசார் தெரிவித்து உள்ளனர். இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.