
நிர்மலா சீதாராமனுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தனது 62-வது பிறந்தநாளை இன்று(ஆகஸ்ட் 18, 2021)கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு, பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்திய பொருளாதாரத்தை சீர்திருத்த ஆத்மநிர்பர் பாரத் கனவை நிறைவேற்றும் நோக்கில் அவர் முன்னோடியாக உள்ளார். நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ பிராத்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து நிர்மலா சீதாராமன் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, மிக்க நன்றி பிரதமர் மோடி அவர்களே. உங்களது ஆசிர்வாதமும் வழிகாட்டுதலும் தேசத்திற்கு சேவை செய்ய எனக்கு பலத்தையும் ஊக்கத்தையும் தருகிறது எனக் கூறியுள்ளார்.