Category:
Created:
Updated:
அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து கொவிட் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான குழு ஒன்றை அமைக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார் .
அதேபோல் மக்களுக்கு தெளிவு படுத்துவதற்காக கிராமிய மட்டத்தில் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் நேற்று(17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சங்கைக்குரிய அத்துரலியே ரத்தன தேரர், நிபுணர்கள் குழு ஒன்றின் மூலம் கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய வைத்திய முறைகள் இந்த கொவிட் நோயை காட்டுப்படுத்தும் விடயத்தில் சிறந்த பெறுபேறு கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.