Category:
Created:
Updated:
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், பலர் அங்கிருந்து வெளியேறுவதற்காக விமான நிலையங்களில் குவிந்து வருகின்றனர். நகர பஸ்களில் ஏறுவதற்கு முயற்சிப்பது போல், விமானத்தில் ஏறுவதற்கு முயற்சித்து வரும் வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண் கல்விக்காக குரல் கொடுத்து வரும் செயற்பாட்டாளரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான பாகிஸ்தானை சேர்ந்த மலாலா யூசப்சாய், ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி உள்ளதை அறிந்து முழு அதிர்ச்சியுடன் பார்க்கிறோம். அங்குள்ள பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்களின் நிலை குறித்து நான் மிகவும் கவலை அடைகிறேன். மனிதாபிமான அடிப்படையில் அங்குள்ள பொதுமக்களை பாதுகாக்க உலகளாவிய சக்திகள் முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.