Category:
Created:
Updated:
இலங்கையில் நிலவும் கொவிட் தொற்று பரவல் குறித்து கலந்துரையாடுவதற்காக கட்சித் தலைவர்கள் கூட்டம் ஒன்றை கூட்டுமாறு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு அனைத்து கட்சித் தலைவர்களின் கருத்துக்கள் மற்றும் யோசனைகள் அத்தியாவசியமாகும் என அறிவிப்பு ஒன்றை மேற்கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.