Category:
Created:
Updated:
நைஜீரியாவின் மத்திய பகுதியில் ஜோஸ் நார்த் என்ற பகுதியில் ருகுபா சாலையில் சென்ற 5 பேருந்துகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் 22 பேர் பலியாகி உள்ளனர். 14 பேர் காயமடைந்து உள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் உடனடியாக அந்த பகுதிக்கு சென்று 21 பேரை மீட்டனர். சந்தேகத்திற்குரிய 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.