
பிரதமரின் சர்வதேச யானைகள் பாதுகாப்பு தினம் செய்தி
2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி கனேடிய தேசிய திரைப்பட தயாரிப்பாளரான பிரிட்டிசியா சிடி மைக்கல் க்லாக் மற்றும் யானைகள் மீளறிமுக அறக்கட்டளையின் செயலாளர் சிவபோன் தர்தரானந்த ஆகியோரின் தலைமையில் யானைகள் மீளறிமுக அறக்கட்டளையினால் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி சர்வதேச யானைகள் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.
´அற்புதமான விலங்குகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பில் தேடி அறிவதற்கு சிறந்த காலம்´ என்பதே சர்வதேச யானைகள் பாதுகாப்பு தினத்தின் தொனிப்பொருளாகும். காட்டு யானைகளின் பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்திற்கான நேர்மறையான தீர்வாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு படைப்பாற்றல் மிக்க அறிவை பரப்புதல் என்பது சர்வதேச யானைகள் தினத்தின் குறிக்கோளும் பணியுமாகும்.
உலகம் முழுவதும் உள்ள மக்கள் மற்றும் கலாசாரம் ஊடாக நேசிக்கப்படும் மற்றும் மதிக்கப்படும் விலங்காகக் காணப்படும் யானைகளின் பாதுகாப்பிற்காக ஒரு அரசாங்கமாக நாம் எப்போதும் முன்நின்றோம். அவற்றின் பாதுகாப்பிற்காக பாரிய சேவையாற்றியுள்ளோம்.
மேலும் பழங்காலத்திலிருந்தே இலங்கை கலாசாரத்தை உலகுக்கு உணர்த்தும் கலாசார நிகழ்வான பெரஹர போன்ற நிகழ்வுகளின் மூலம் இந்த மரியாதைக்குரிய விலங்கு இலங்கை சுற்றுலாத்துறைக்கு அளித்த சேவை மகத்தானது.
இலங்கையில் அதிகளவில் பேசப்படும் மற்றும் மக்களை சிரமத்திற்கு உட்படுத்தும் யானை – மனித மோதலை தீர்ப்பதற்கு தற்போதைய அரசாங்கம் இதுவரை பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதுடன், யானைகள் அழியும் அபாயத்தில் இருக்கும் இந்நேரத்தில், யானைகளைப் பாதுகாப்பது ஒரு அரசாங்கமாக நம் அனைவரின் பொறுப்பாகும்.
அத்துடன், அதற்காக ஒரு தேசமாக அனைவரும் அணிதிரள வேண்டிய காலம் எழுந்துள்ளது என்பதை இன்றைய யானைகள் பாதுகாப்பு தினத்தில் நாம் அனைவரும் மனதில் கொண்டு செயற்பட வேண்டும்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ - இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு