
இலங்கை காட்டிய மனிதாபிமான ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்த ஜப்பான்
வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்த இலங்கையில் உள்ள ஜப்பானியத் துதுவர் மாண்புமிகு அகிரா சுஜியாமா, ஜப்பான், டோக்கியோவில் இந்த ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று இலங்கை காட்டிய மனிதாபிமான ஒத்துழைப்புக்கு நன்றிகளைத் தெரிவித்தார்.
இந்த சந்திப்பு ஆகஸ்ட் 9ஆம் திகதி வெளிநாட்டு அமைச்சில் நடைபெற்றது.
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் வேண்டுகோளின் பேரில், 1.45 மில்லியன் டோஸ் அஸ்ட்ரா செனெக்கா தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கிய ஜப்பான் அரசாங்கத்திற்கும் அதன் மக்களுக்கும், இலங்கை அரசாங்கமும் அதன் மக்களும் நல்குகின்ற நன்றிகளை ஜப்பான் பிரதமருக்கு அமைச்சர் குணவர்தன தெரிவித்தார். இலங்கைக்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு விரைவில் கிடைக்கச் செய்வதற்காக இலங்கை அரசாங்கம் முன்னெடுத்த உடனடி நடவடிக்கைகளால் ஜப்பான் அரசாங்கம் மிகவும் மகிழ்ச்சியடைவதாக ஜப்பானியத் தூதுவர் தெரிவித்தார்.