உவர் நிலங்களை படிப்படியாக விளை நிலங்களாக மாற்றுவதற்கான திட்டங்கள் முன்னெடுப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் உவர் நிலங்களை படிப்படியாக விளை நிலங்களாக மாற்றுவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட பிரதி மாகான விவசாய திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் யாமினி சசிலன் தெரிவித்துள்ளார்முல்லைத்தீவு மாவட்டத்தில் 983 ஏக்கர் நிலங்கள் உவர் நிலங்களாக காணப்படுகின்றன குறிப்பாக இந்தப் பிரதேசங்களில் உவர்நீர்த் தடுப்பணை இன்மை மற்றும் தொடர்ச்சியாக உவர் நீர் உட்புகுதல் என்பவற்றால் நிலம் உவர்த்தன்மை அடைந்துள்ளனன.இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட பிரதி மாகாண விவசாய திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் முல்லைத்தீவு மாவட்டத்தில் விவசாய திணைக்களத்தினால் கடந்த காலங்களில் உவர் நிலங்களாக காணப்பட்ட நிலங்களில் உவர் தன்மையை நீக்கி பயிர்ச் செய்கையை ஊக்குவிக்கும் வகையில் முன்மாதிரியான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.குறிப்பாக சேதனப் பசளை பயன்பாடு மற்றும் உமி போன்ற பொருட்களைப் பயன்படுத்தல் என்பன ஓரளவு உவர் தன்மையை குறைத்து சாதாரணநிலங்களாக மற்றப்பட்டு பயிர் செய்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதுஇதனால் ஓரளவு விளைச்சலை பெறக்கூடியதாக இருக்கும் 983 ஏக்கர் நிலத்தை சீராக்குவது என்பது கடினமான விடையம் ஆகும் இதில் அரைவாசிப் பகுதியையாவது மாற்றியமைக்ககூடிய வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்