Category:
Created:
Updated:
இந்தியாவில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டதும், இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கு கனடா அரசு தடை விதித்தது. அதாவது, கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி இந்த தடை விதிக்கப்பட்டது.
ஜூலை 21 ஆம் தேதியுடன் இந்த தடை முடிவுக்கு வர இருந்த நிலையில், மேலும் ஒரு மாதம் நீட்டித்து கனடா அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இந்தநிலையில் இந்திய பயணிகள் விமானங்களுக்கு செப்டம்பர் 21 வரை தடை நீட்டிக்கப்படுவதாக கனடா அறிவித்துள்ளது.
இதன்படி, வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி வரை இந்திய பயணிகள் விமானங்களுக்கான கனடாவின் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.