
தடுப்பூசி வர்த்தக பெயர்களை மறந்து விட்டு தடுப்பூசிகளை உடன் போடுங்கள்
கொரோனா தடுப்பூசிகளின் வர்த்தக பெயர்களை போட்டு குழப்பி கொள்ள வேண்டாம். இவை பற்றிய கருத்துகள், வழமையான மருந்து வர்த்தக உலக போட்டா போட்டி விவகாரம். உள்நாட்டில் வாழ்வதற்கும், வெளிநாடு செல்வதற்கும், முதலில் உயிர் வாழ வேண்டும். ஆகவே தடுப்பூசிகளின் வர்த்தக பெயர்களை மறந்து விட்டு, தடுப்பூசியை தாமதிக்காமல் போட்டுக்கொள்ளுங்கள். குறிப்பாக கொழும்பு மக்கள் இனியும் தாமதம் செய்ய வேண்டாம். இங்கே அனர்த்தம் வெளியே சொல்லப்படுவதை விட அதிகம் என்பதை பொறுப்புடன் கூறுகிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எது எப்படி இருந்தாலும், இந்த வேளையில், சுகாதார துறை மருத்துவ ஊழியர்களுக்கும், இராணுவத்தினருக்கும் முழு ஒத்துழைப்பை வழங்கும் முகமாக, நாம் கொரோனா தடுப்பூசிகளின் வர்த்தக பெயர்களை கேட்டு நிற்காமல் இருப்பதை போட்டுக்கொள்ள வேண்டும். அதன்மூலம் படு வேகமாக பரவி வரும் டெல்டா கோவிட் கிருமிகளில் இருந்து உங்களையும், நாட்டையும் பாதுகாக்க முடியும் என்று கூறியுள்ளார்.