
சமகால அரசாங்கத்தின் ஒருவருட கால சாதனை
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, கூட்டுக்கட்சிகளுடன் ஒன்றிணைந்து 2020 ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெற்ற பொது தேர்தலில் பாராளுமன்றத்தில் 3/2 பெரும்பான்மையை பெற்று வெற்றியடைந்து நேற்றுடன் ஒருவருடம் பூர்த்தியாகியுள்ளது.
இத் தருணத்தில் அரசாங்கம் பல்வேறு சவால்களை எதிர்க்கொண்டு முன்னோக்கி செல்லும்போது அரசாங்கத்தின் செயல்கள் பலராலும் போற்றப்பட்டுள்ளது
அதேவேளை அதற்கு எதிராக கல்லடியும், சொல்லடியும் விழுந்துக்கொண்டே இருக்கின்றது.
2019 நவம்பர் 16 ஆம் திகதி நடைபெற்ற ஜனாபதி தேர்தலில் பெற்ற மாபெரும் வெற்றியை பலப்படுத்த வேண்டுமாயின், பொது தேர்தலில் உறுதியான ஆட்சியொன்றை உருவாக்க அதிகாரத்தை தருமாறு பொதுமக்களிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அன்று கேட்டுக்கொண்டார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும், அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்திற்கு அமைய சௌபாக்கிய தொலைநோக்கு திட்டத்தினை வலுப்படுத்த மக்களிடம் இருந்து ஆதரவை கேட்டுக்கொண்டனர். இதற்கிணங்க பொது மக்கள் 3/2 பெரும்பான்மையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு வழங்கினர்.
சௌபாக்கிய தொலைநோக்கு திட்டத்தின் இலக்கை நோக்கி நாடு சென்றுக்கொண்டிருக்கும் போதே, சற்றும் எதிர்பாராத விதமாக கொவிட் தொற்று அசாதாரண நிலை ஏற்பட்டது. இதனைதொடர்ந்து கொவிட் தொற்று நிலையுடனேயே சௌபாக்கிய தொலைநோக்கி திட்டத்தின் இலக்கை நோக்கி அரசாங்கம் பயணிக்கின்றது. இந்த கொவிட் வைரஸ் தெற்றானது நமது நாட்டில் மட்டுமன்றி உலக நாடுகளிலும் சமூகம், பொருளாதாரம், சுகாதாரம் போன்ற துறைகளில் அதிக சிக்கல்கள் ஏற்பட வழிவகுத்துள்ளது.
மேலும் அனைத்து உலக நாடுகளிலும் பொருட்கள் சேவை உற்பத்திகள், விநியோகம் மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி போன்ற பல்வேறு துறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதனால் அனைத்து நாடுகளுமே பொருளாதார சவால்களுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.