Category:
Created:
Updated:
பதுளை மாவட்டத்தில் மத்தியஸ்த்த சபைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நீதியமைச்சர் உறுதியளித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ. அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற கட்டடதொகுதியில் நேற்று (05) இடம்பெற்ற நீதியமைச்சின் ஆலோசனை கூட்டத்தில் தாம் இதனை வலியுறுத்தியதாக அரவிந்த குமார் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
தமது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதியமைச்சர் அலி சப்ரி குறித்த இணக்கப்பாட்டினை தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எதிர்வரும் 3 வருடங்களுக்குள் ஹப்புத்தளை அல்லது ஹல்தமுல்ல பகுதிகளில் புதிய நீதிமன்றம் ஒன்றினை ஸ்தாபிப்பதற்கும் அந்த கூட்டத்தின் போது அனுமதி கிடைக்கப்பெற்றதாக அரவிந்தகுமார் குறிப்பிட்டார்.