
மீண்டும் தோனி ட்விட்டர் பக்கத்திற்கு புளூடிக்
தோனியின் ட்விட்டர் பக்கத்திற்கு புளூடிக் நீக்கப்பட்டதை அடுத்து சற்று முன்னர் மீண்டும் புளூடிக் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பது தற்போது தெரியவந்துள்ளது.
தோனியின் ட்விட்டர் பக்கத்தில் திடீரென புளூடிக் நீக்கப்பட்டது. இதனையடுத்து தோனி ரசிகர்கள் கொந்தளித்து ட்விட்டருக்கு எதிரான கருத்துக்களை ட்விட்டரில் பகிர்ந்து வந்தனர்.
தோனி ரசிகர்களின் கொந்தளிப்பை அடுத்து மீண்டும் தோனியின் ட்விட்டர் பக்கத்தில் ட்விட்டர் நிர்வாகம் புளூடிக் தருவதாக அறிவித்துள்ளது. ட்விட்டர் நிர்வாகத்தைப் பொருத்தவரை புளூடிக் பெற்றவர்கள் அவர்களது கணக்கை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும் இல்லையெனில் புளூடிக் நீக்கப்படும். தோனி கடந்த ஜனவரி மாதத்திற்கு பிறகு எந்தவித ட்விட்டையும் பதிவு செய்யாததால் அவரது புளூடிக் நீக்கப்பட்டதாகவும் ஆனாலும் ரசிகர்களின் வேண்டுகோள் காரணமாக மீண்டும் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது