Ads
அவையில் விசில் சத்தம் – வெங்கய்யா நாயுடு எச்சரிக்கை
மாநிலங்களவையின் மாண்பை குலைக்கும் வகையில் நடப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வெங்கய்யா நாயுடு எச்சரித்துள்ளார்.
பாராளுமன்ற மக்களவை, மாநிலங்களவை தொடங்கி 8 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், இரு அவைகளிலும் பெகாசஸ் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் தொடர்ந்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வந்தன. தற்போது மாநிலங்களவை தொடங்கியுள்ள நிலையில் பேசிய வெங்கய்யா நாயுடு “அவையில் விசில் அடிப்பது, பதாதைகளை ஏந்தி அமளி செய்வது போன்ற புகார்கள் அடிக்கடி வருகின்றன. அவையின் பொறுமையை சோதிக்க வேண்டாம், அவையின் மாண்பை குலைக்கும் வகையில் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளார்.
Info
Ads
Latest News
Ads