மனைவியை கொன்ற கணவன் ரயில்முன் பாய்ந்து தற்கொலை
கரூர் காந்திகிராமம், இந்திராநகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் அதே பகுதியில், பழைய துணி வியாபாரம் செய்து வந்துள்ளார். நேற்று மாலை குடிபோதையில் மனைவி சின்னபொன்னுவிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் தகராறு முற்றி மனைவியின் தலையில் கல்லை போட்டு கொன்றுள்ளார். போதையில் செய்வது அறியாது அங்குமிங்கும் சுற்றிய சுப்பிரமணியன், பயத்தில் வீட்டின் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் படுத்துள்ளார். அப்போது, பழனியில் இருந்து சென்னைக்கு செல்லும் விரைவு ரயில் ஏறி சுப்பிரமணியன் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தாந்தோன்றிமலை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி 25 ஆண்டுகள் ஆன நிலையில், இவர்களுக்கு பிள்ளைகள் மூன்று பேர் உள்ளனர். இவர்கள் மூன்று பேருக்கும் திருமணம் ஆகி உள்ளது. மூத்த மகன் அருண்குமார் (24), இரண்டாவது மகன் அஜித்குமார் (23), மூன்றாவது பெண் நந்தினி(22).
போதையால் பாதை மாறிய சுப்பிரமணியனால் நிகழ்ந்த சம்பவம் போல் இனி நடக்காமல் இருக்க, மது போதையில் இருந்து மீள குடி போதை மறுவாழ்வு மையத்தினை அரசு ஏற்படுத்தி, மற்றவர்களுக்கும் நல்வழி காண்பிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.