பிரபல போதைப்பொருள் வியாபாரி உட்பட நால்வர் கைது
வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிறைந்துரைச்சேனைப் பிரதேசத்தில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பிரபல ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் வியாபாரியும் இப்பிரதேசத்தில் போதை விற்பனையின் பிரதான சூத்திரதாரி என நம்பப்படும் நபர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய வாழைச்சேனை பொலிஸாரோடு இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே பல்வேறு பிரயத்தனத்துக்கும், போராட்டத்துக்கு மத்தியில் தப்பிச் செல்ல முயன்ற இவர்கள் நால்வரும் மடக்கிப் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (29) பிறைந்துரைச்சேனை, அஸ்லம் ஸ்டோர் வீதியில் வைத்தே 33 வயதுடைய குறித்த பிரதான சூத்திரதாரியும் 20, 22, 2 3 வயதுடைய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து 2 கிராம் 350 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் 3 கிராம் 20 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதோடு, 16,000 ரூபா பணமும் கைப்பட்டப்பட்டுள்ளது. இவர்கள் நால்வரும் பிறைந்துரைச்சேனைப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.