Category:
Created:
Updated:
பிரிட்டன் பிரதமராக இருந்து வருபவர் போரிஸ் ஜான்சன். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவருக்கு மழை பெய்ததால் குடை வழங்கப்பட்டுள்ளது. எல்லோரும் குடையை விரித்து பிடிக்க போரிஸ் ஜான்சனுக்கு குடையை விரிக்க தெரியாததால் நீண்ட நேரமாக அதனுடன் மல்லுக்கட்டியுள்ளார். ஒருவழியாக குடையை திறந்த பிறகு அது மீண்டும் மூடிக்கொள்ள அதை உபயோகிக்க தெரியாமல் போரிஸ் விழி பிதுங்கியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.