சினிமா செய்திகள்
“மனசாட்சிப்படி வாக்களியுங்கள்!”  என சிவகார்த்திகேயன் வேண்டுகோள்
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச் சாவடியில் நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் வந்து தனது வாக்கை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய
காலையில் முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவை முன்னிட்டு நடிகர் அஜித்குமார் சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கை செலுத்தினார்.திருவான்மியூர்
சைக்கிள் ஓட்டிச் சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
தமிழகம், புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்.19) காலை 7 மணிக்கு தொடங்கியது
பாடகி ஜென்சி ஓரங்கட்டப்பட்ட மர்மம் என்ன?
சினிமாவில் நடிகர்களாக இருப்பவர்கள் ஒரு காலகட்டத்தில் ஜொலிப்பதும், பின்னாளில் மார்க்கெட் இழப்பதும் சர்வ சாதாரணமாக நடப்பதுதான். ஆனால் பின்னணி பாடகர்களை
இளைஞர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் வேண்டுகோள்
தமிழகத்தில் நாளை மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 100% வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பல்வேறு வகைகளில
‘தங்கலான்’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு
சென்னை ஏப்ரல் 17 2024- இந்தியாவின் முன்னணி கன்டென்ட் ஸ்டுடியோவான ஜியோ ஸ்டுடியோஸும், கே. ஈ. ஞானவேல் ராஜாவிற்கு சொந்தமான முன்னணி தயாரிப்பு மற்றும் திரைப
 'மனுசி' படத்தின் டிரைலர் வெளியானது  (டிரைலர் வீடியோ இணைப்பு)
அறம்’ பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் ‘மனுசி’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். கடந்த 2022-ம் ஆண்டு ஆண்ட்ரியாவின் பிறந்தநாளில
குழந்தைகளுக்காக வாழ்க்கையை தியாகம் செய்த சுலக்சனா
16 வயதில் நடிக்க வந்து 18 வயதில் திருமணம் செய்து 23 வயதில் மூன்று குழந்தைகளுக்கு தாயான நடிகை சுலக்சனா விவாகரத்து பெற்று தனது குழந்தைகளை வளர்ப்பதற்காகவ
மும்பையில் 4000 ஆயிரம் சதுர அடியில்  புது வீடு வாங்கினார் பூஜா ஹெக்டே
தமிழில் ராசி இல்லாத நடிகை என பெயர் எடுத்த பூஜா ஹெக்டே மீண்டும் தெலுங்கு பக்கம் சென்றார். தற்போது இவர் சார்மி கவுர், வம்ஷி பைடிப்பள்ளி மற்றும் பூரி ஜெக
வைரலாகும் ‘விசில் போடு’ பாடல்
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘க்ரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ சுருக்கமாக ‘கோட்’. இந்த படத்தில் பிரசாந்த், மைக் மோகன் உள்ளிட்ட பலர் நடித்து
தமிழ் புத்தாண்டையொட்டி சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் இரண்டு வெவ்வேறு தோற்றங்களில் காட்சிய
2026 சட்டமன்ற தேர்தலில் போட்டி என்ற அறிவிப்பை வெளியிட்ட விஷால்
நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்
Ads
 ·   ·  7499 news
  •  ·  5 friends
  • I

    9 followers

அரசு தன்னிச்சையாக ஜனநாயகத்திற்கு விரோதமாக செயற்படுகிறது?

அரசாங்கமும், ஜனாதிபதியும் தன்னிச்சையாக ஜனநாயகத்திற்கு விரோதமாகவும், நடைமுறைகளிற்கு விரோதமாகவும் இவ்வாறான செயற்பாடுகளை தடுக்க எதிர்காலத்தில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் தீர்மானங்களை எடுத்துள்ளோம் என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.


கிளிநொச்சியில் நேற்று (27) இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றம் வடக்கு மாகாணத்தில் உள்ள உள்ளுராட்சி மன்ற தலைவைர்களுடனான கலந்துரையாடலின் பின்ன இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவ்ர் இவ்விடயத்தை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மாலை வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள், மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் கூடி இன்றைக்கு பேசு பொருளாக இருக்கின்ற வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் நியமனம் தொடர்பில் நாங்கள் ஆராய்ந்தோம்.

வவுனியாவில் அரசாங்க அதிபராக இருந்த பந்துலசேனா எனும் அதிகாரி பந்துல சேனாவாக இருந்தால் அதனை நாங்கள் எதிர்க்கவில்லை. எங்களுடைய உருத்து எத்தனையோ லட்சக்கணக்கான மக்களின் உயிர்களை பலி கொடுத்து இன்றும் எங்களுடைய இனத்தின் விடுதலை, எங்கள் தேசத்தின் விடுதலை, எங்களுடைய மக்களின் விடுதலையை அடையாது இருக்கின்ற பொழுதும், 13 வது திருத்த சட்டத்திலும் கூட மிக அரிதாக இருக்கின்ற சில உரிமைகள் அதைவிட ஒரு மக்கள் கூட்டத்தின் அடிப்படை உரிமை, தங்களுடைய தேசத்தில், தங்களுடைய மக்கள் மத்தியில், தங்களுடை பிறப்புரிமை தங்களுடைய மொழியில் தங்களுடைய நிர்வாகத்தை தாங்களே நடார்த்த வேண்டும் என்பதை நாங்கள் இன்று நிலைநாட்டி பேசினோம்.

வடக்கு கிழக்கு மாகாண சபைகளில் மிகப் பெரும்பாலான தமிழ் மக்கள் தங்களுடைய மொழியில் தங்களுடைய நிர்வாகத்தை கையாள்வதற்கே விரும்புகின்றார்கள். அப்படி ஓரளவிற்கேனும் கிடைத்த உரிமையை நாங்கள் இழக்கக்கூடாது என்பதற்காக மொழி உரிமையையும், தங்களுடைய நிர்வாகத்தை தாங்களே கையாள்வதற்கான உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காகத் தான் பந்துலசேனாவினுடைய நியமனத்தை திருப்பி பெற்று எங்கள் மக்கள் மத்தியில் நிர்வாகத்தை செய்வதற்குஅவர்களது மொழியில் நிர்வாகத்தை நடார்த்தக்கூடிய ஒருவரை நியமிக்குமாறு தொடர்பில் நாங்கள் அரசாங்கத்தை கோருகின்றோம்.

1956 ஆம் ஆண்டு பண்டாரநாயக்காவின் ஆட்சிக் காலத்தில் தனிச் சிங்கள மொழியாக சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் நீதிமன்றங்களில் சிங்கள மொழிக்காக ஊழியர்களை அனுப்பியபொழுது, தந்தை செல்வாவும், அப்பொழுது இருந்த கட்சி தலைவர்களும் பெரும் போராட்டங்களை நடத்தியிருக்கின்றார்கள்.

அந்த விடயத்தினையும் நாங்கள் இன்று ஆராய்ந்திருந்தோம். ஆகையினால் இந்த கொரோனா வைரஸ் காலத்திலும் இந்த விடயங்களை முன்னெடுக்க வேண்டும் என்பது பற்றி அனைத்து கட்சி தலைவர்களும் ஒன்று கூடிய சூழ்நிலையை நாங்கள் ஏற்படுத்தி அடுத்த கட்ட நடவடிக்கைக்குள் செல்ல வேண்டும் என்றும் நாங்கள் தீர்மானித்திருக்கின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

  • 590
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads