சினிமா செய்திகள்
என்.எஸ்.கிருஷ்ணுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி
படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்குப் போன என்.எஸ்.கிருஷ்ணுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி.. என்.எஸ்.கே-வை ஆச்சர்யப்படுத்தயது எஸ்.எஸ்.வாசன் இந்திய சினிமாவ
பாடகி வாணி ஜெயராம்
தமிழ் சினிமாவின் பின்னணி பாடகிகளுள் மிகவும் முக்கியமானவர் பாடகி வாணி ஜெயராம்; இவரது இயற்பெயர் கலைவாணி. 1945 நவம்பர் 30 அன்று வேலூரில் துரைசாமி ஐயங்கார
அஜீத்துக்கு பாடிய பாட்டால் எஸ்.பி.பி-க்கு வந்த சிக்கல்
அமர்க்களம் ஷுட்டிங்கில் நடந்த சுவாரஸ்யம்இன்று திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜீத்தை முதன் முதலில் பிரேம புஸ்தகம் தெலுங்குப் படத்திற்காக சிபா
ஹிட் பாடல்கள் கொடுத்தும் கொண்டாடப்படாத பாடகி
ஹிட் பாடல்கள் கொடுத்தும் கொண்டாடப்படாத பாடகி... பி.எஸ்.சசிரேகா பற்றி தெரியுமா?1978-ம் ஆண்டு வெளியான லட்சுமி என்ற படத்தில் மேளம் கொட்ட நேரம் வரும் என்ற
தூக்குதுரை ஓடிடியில் ரிலீஸ் ஆனது
ஓப்பன் கேட் பிக்சர்ஸ் சார்பில் அன்பு, வினோத்,அரவிந்த் ஆகியோரது தயாரிப்பில் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கி யோகி பாபு நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியானது"த
சேலையில் கிளாமராக போஸ் கொடுத்த தமனனா
சமீபத்தில் தமன்னா , ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹிட்டானது.
வித்தியாசமான உடையில் மாளவிகா மோகனன்
ஈரானிய இயக்குனர் மஜித் மஜிது இயக்கிய பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தின் மூலம் நல்ல அறிமுகம் பெற்ற மாளவிகா மோகனன், அதன் பிறகு தமிழில் மாஸ்டர், பேட்ட மற்றும
 ‘எத்தனை காலம் தான்..’ பாடலை எம்.ஜி.ஆருக்கு எழுதித் தர மறுத்த கவிஞர்
எந்தக் காலத்துக்கும் பொருந்தும் ‘எத்தனை காலம் தான்..’ பாடலை எம்.ஜி.ஆருக்கு எழுதித் தர மறுத்த கவிஞர்.. காரணம் என்ன தெரியுமா?தமிழ் சினிமாவில் அதுவரை சிற
உதவிக் கேட்டு வந்தவர்களை வெறும் கையுடன் அனுப்பாத கலைவாணர்
தமிழகத்தின் கலைவாணர் என்றழைக்கப்படும் என்.எஸ்.கிருஷ்ணன் ஏகப்பட்ட சொத்துகள் சம்பாதித்தவர் கடைசிகாலத்தில் அனைத்தையும் இழந்து படங்களில் சிறிய வேடங்களில்
ஒரே படத்துடன் திரையுலகில் இருந்து வெளியேறிய நடிகை
கடந்த 1991 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த ‘குணா’ திரைப்படம் வெளியானபோது அனைத்து ஊடகங்களும் அந்த படத்தை பாராட்டினாலும் ரசிகர்கள் மத்தியில் அந்த படம் பெரிய
''தங்கலான்'' படம் ரிலீஸ் தள்ளிப்போக காரணம்?
பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம், மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் தங்கலான். இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார். இப்படத்
பிரபல அரசியல்வாதி நிவேதா பெத்துராஜுக்கு துபாயில் வீடு வாங்கி கொடுத்தாரா?
பிரபல அரசியல்வாதி ஒருவர் நடிகை நிவேதா பெத்துராஜுக்கு துபாயில் ரூபாய் 50 கோடி மதிப்பில் வீடு வாங்கி கொடுத்ததாக அரசியல் விமர்சகர் ஒருவர் தனது யூடியூப் வ
Ads
 ·   ·  662 news
  •  ·  15 friends
  • S

    23 followers

கிளிநொச்சி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பெண்கள் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் கருத்து

அமைச்சர் இல்லத்தில் தான் பாதிக்கப்பட்டமை தொடர்பில் வெளிப்படுத்திய சிறுமியோ அல்லது பெண்ணோ, ஆரம்ப கட்டத்தில் தான் பாதிக்கப்பட்டமை தொடர்பில் தெரியப்படுத்தியிருந்தால் கிசாலினியின் மரணம் மர்மமானதாக இருந்திருக்க முடியாது என கிளிநொச்சி மாவட்ட பெண்கள் வாழ்வுரிமைச்சங்க இணைப்பாளர் வாசுகி வள்ளிபுரம் தெரிவித்துள்ளார்.கிளிநொச்சி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பெண்கள் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இன்றைக்கு ஊடகங்களில் பார்க்கின்ற செய்திகளிலே 15 வயது சிறுமி கோழிக்கூட்டுக்குள் அடைத்து வைத்து தந்தையினால் கொடுமைப்படுத்தல், தந்தையினால் 14 மற்றும் 12 வயது சிறுமிகள் கர்ப்பம், தந்தையினால் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு போன்ற செய்திகளை கடந்த சில நாட்களாக நாங்கள் பார்த்து வருகின்றோம்.இந்த செய்திகளை கேட்கின்றபொழுது உண்மையாகவே மனம் வேதனைப்படுகின்றது. உருவத்திலே மனிதர்களாக இருக்கும் இவ்வாறானவர்கள் குணத்திலே மிருகங்களாக இருப்பதாகவே நாங்கள் பார்க்கின்றோம்.உண்மையிலே, நகர் மற்றும் கிராமப்புறங்களில் சிறுமிகள் வன்புனர்வுக்குட்படுதல், துன்புறுத்தப்படல் உள்ளிட்ட விடயங்கள் கௌரவத்திற்காக வெளிக்கொண்டுவரப்படுவதில்லை. சில பெற்றோர் அதனால் கௌரவம் பாதிக்கும் என கருதுகின்றனர்.வித்தியாவின் கொலைக்கு முன்னர் இடம்பெற்ற பல சம்பவங்களும், கிசாலினியின் கொலைக்கு முன்னர் இடம்பெற்ற பல சம்பவங்களும் வெளிக்கொணரப்பட்டிருந்தால் இன்று வித்தியாவின் கொலையாக இருக்கலாம் அல்லது கிசாலினியின் கொலையாக இருக்கலாம் அவை நிறுத்தப்பட்டிருக்கும்.கொலைகளிற்கு முன்னரான பகுதிகள் வெளிக்கொண்டுவரப்படுவதில்லை. இவ்வாறான கொடுமைகள், பாலியல் துஸ்பிரயோகங்கள் இடம்பெறுகின்றபொழுது முறையிடுங்கள், எங்களைப்போன்று பல மாவட்டங்களில் பெண்கள் அமைப்புக்கள், செயற்பாட்டு குழுக்கள் கிராமங்களிலும், மாவட்டங்களிலும் செயற்பட்டு வருகின்றது.ஒருவர் தான் விரும்பாத ஒரு விடயம் இடம்பெறுகின்றது, அல்லது துன்புறுத்தல் இடம்பெறுகின்றது என உணர்ந்தால் அவ்வாறான பெண்கள் அமைப்புக்களிடம் அல்லது எங்களிடம் இரகசியமான முறையில் முறையிடுங்கள்.அவ்வாறான முறைப்பாட்டின் ஊடாக இரகசியமான முறையில் குற்றவாளியை அடையாளம் கண்டு அவருக்கான தண்டனையை பெற்றுக்கொடுப்பதுடன், இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாது தடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.சகல பெற்றோரும் உங்களது பிள்ளைகளில் எவ்வளவு கவனம் கொள்கின்றீர்களோ, அதேபோன்று இவ்வாறான குற்றவாளிகளை பாதுகாப்பதற்கு உறுதுணையாக இருக்க வேண்டம். பிள்ளைகள் உறவினர்கள் ஊடாகவோ அல்லது தமக்கு அநீதி, அல்லது துஸ்பிரயோகங்கள் இழைக்கப்படுகின்றபோது என உணர்கின்ற பட்சத்தில் அவைகளை வெளிக்கொண்டுவருவதன் மூலம் கொடுமைகள், கொலைகள் நடைபெறுவதை தடுக்க முடியும்.இன்று முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் வீட்டிலே ஆரம்ப காலத்தில் வேலை செய்த பெண்கள் சிறுவர்களிடத்திலே விசாரணைகள் நடத்தப்படுகின்றபொழுது, நானும் அதில் துன்புறுத்தப்பட்டேன் என்ற விடயம் கிசாலினியின் மரணத்திற்கு பின்னர் தெரிய வருகின்றது.தற்பொழுது தான் பாதிக்கப்பட்டமை தொடர்பில் வெளிப்படுத்திய சிறுமியோ அல்லது பெண்ணோ, ஆரம்ப கட்டத்தில் தான் பாதிக்கப்பட்டமை தொடர்பில் தெரியப்படுத்தியிருந்தால் கிசாலினியின் மரணம் மர்மமானதாக இருந்திருக்க முடியாது.துஸ்பிரயோகத்திற்குட்படுத்தப்படுகின்றதாக இருந்தாலும், தனது உரிமைக்கு மாறான செயற்பாடுகள் இடம்பெறுவதாக இருந்தாலும் இலங்கையில் பெண்கள் சிறுவர் பாதுகாப்பு சட்டங்கள் எழுத்துருவில் இருக்கின்றன. அதனை நடைமுறைப்படுத்துவதற்கு அனைவரும் முன்வர வேண்டும்.சிறுவர்களாக இருந்தாலும், பெற்றோர்களாக இருந்தாலும் குற்றவாளியை மூடிமறைக்காதும், கௌரவத்தை பாராதும் குற்றவாளிகளை அடையாளம் காட்டுவதன் ஊடாகவே வித்தியா, கிசாலினி போன்றவர்களின் மரணம் இடம்பெறாது தடுக்கவும், சிறுவர்களிற்கான ஒளிமயமான எதிர்காலத்தை பெற்றுக்கொடுக்கவும் முடியும்.ஒரு மரணம் சம்பவிக்கும்வரை காத்திருக்காமல், அதற்கு முன்னராக துஸ்பிரயோகங்கள் இடம்பெறுமிடத்தில் குற்றவாளிகளை சட்டத்தின் முன் உடனடியாக கொண்டு வருவதற்கு சகல மக்களும் விழிப்புணர்வுடன் சட்டத்தை அணுகி நீதியை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் என வேண்டுகின்றேன் எனவும் அவர் குறித்த ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.

  • 575
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads