சச்சின் டெண்டுல்கரை கவர்ந்த இளைஞர்
சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் மாற்றுத் திறனாளி ஒருவர் தன் காலினால் கேரம் விளையாடிய வைரல் வீடியோவை பகிர்ந்துள்ளார். கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றவர்களின் உத்வேகத்தை தூண்டும் விதமாக சில பாசிட்டிவ் ஆன போஸ்ட்களை தன் சமூக ஊடகப் பக்கங்களில் பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சச்சின் பகிர்ந்த வைரல் வீடியோவில் மாற்றுத் திறனாளி ஒருவர் தன் காலால் கேரம் போர்டு விளையாடியது அனைவருக்கும் ஆச்சரியத்தையும் சோகத்தையும் ஒருசேர எழுப்பியது.
சச்சின் டெண்டுல்கர் வீடியோவை பகிர்ந்து அதில் ‘Here’s Harshad Gothankar who chose i-m-POSSIBLE as his motto’ என்ற வாசகத்தையும் பதிவிட்டுள்ளார். ஹர்ஷத் கோதாங்கர் என்ற அந்த மாற்றுத்திறனாளி நபர் ஒருவர் தன் நண்பர்களுடன் கேரம் விளையாடினார், மற்றவர்கள் கையால் விளையாடும் போது அவர் மட்டும் காலால் விளையாடியது தான் வியப்பு.
சாத்தியமற்றதற்கும் சாத்தியத்துக்குமான வித்தியாசம் ஒருவரது உறுதிப்பாட்டைப் பொறுத்தது என்கிறார் சச்சின் டெண்டுல்கர். மாற்றுத் திறனாளியின் இந்த அதிசயத் திறனை வியந்த சச்சின், சாத்தியமாகக் கூடியதை நோக்கிய அவரது முயற்சியை நேசிக்கிறேன். இதிலிருந்து நாம் அனைவரும் பாடம் கற்றுக் கொள்ளலாம் என சச்சின் பதிவிட்டுள்ளார். சச்சின் டெண்டுல்கரின் இந்த ட்விட்டர் பதிவை 12,400 பேர் லைக் செய்துள்ளனர்.