ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சேவைகளுக்கு இராணுவ தளபதி பாராட்டு
மூன்று தசாப்த கால கடின உழைப்பு மற்றும் இராணுவத்திற்கான அர்ப்பணிப்பான சேவையின் பின்னர் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறவிருக்கும் பாதுகாப்பு தலைமையக வளாகத்தின் திட்டமிடல் முகாமைத்துவ மேலதிக பணிப்பாளர் மேஜர் ஜெனரல் திலக் வீரகோன், பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவை இராணுவ தலைமையகத்திலுள்ள தனது அலுவலகத்திற்கு நேற்று (26) சந்தித்தார்.
இதன்போது அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பீரங்கி படையணியின் சிரேஷ்ட அதிகாரிகளுள் ஒருவரான மேஜர் ஜெனரல் திலக் வீரகோன், ஸ்ரீ ஜயவர்தனபுரவிலுள்ள புதிய பாதுகாப்பு தலைமையக கட்டிடத் தொகுதியின் கட்டுமான பிரிவிலுள்ள தனக்கான உத்தியோகபூர்வ அலுவலகத்தை மீளக் கையளிக்கும் முன்பாக பல்வேறு நியமனங்களை வகித்துள்மை குறிப்பிடத்தக்கது.
குறித்த சந்திப்பின் போது ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் திலக் வீரகோன் முன்ணுதாரமான சேவைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டதோடு, ஒய்வின் பின்னராக எதிர்கால திட்டமிடல்கள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார். பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் நியமனம் பெறுவதற்கு முன்பாக ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரி இராணுவம் மற்றும் இலங்கை பீரங்கி படைக்குள் பல முக்கிய நியமனங்களை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அதனை அடுத்து ஓய்வு பெற்ற சிரேஷ்ட அதிகாரி தளபதியின் வழிகாட்டல்களுக்கும் பாராட்டுக்களுக்களுக்கு நன்றிகளை தெரிவித்ததோடு, தனது கடமைகளை நிறைவேற்றுவதற்காக இராணுவத் தளபதியிடமிருந்து கிடைக்கப்பபெற்ற ஊக்குவிப்பு தொடர்பிலும் நினைவு கூர்ந்தார்.