Ads
கர்நாடக முதல் மந்திரி பொறுப்பில் இருந்து எடியூரப்பா ராஜினாமா
கர்நாடகாவில் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 26-ம் தேதி எடியூரப்பா நான்காவது முறையாக முதல் மந்திரியாக பதவி ஏற்றார். 75 வயதை தாண்டிய தலைவர்களுக்கு பாரதீய ஜனதாவில் கட்டாய ஓய்வு அளிக்கப்படுகிறது.
ஆனால் அதில் இருந்து 76 வயதான எடியூரப்பாவுக்கு விலக்கு அளித்து அவருக்கு முதல்-மந்திரி பதவியை பாரதீய ஜனதா மேலிடம் வழங்கியது. அப்போதே 2 ஆண்டுகள் முடிந்ததும் முதல்-மந்திரி பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. அந்த நிபந்தனையை எடியூரப்பா ஏற்றுக் கொண்டார்.
எடியூரப்ப்பா முதல் மந்திரியாக பதவி ஏற்று இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவு அடைந்த நிலையில், முதல் மந்திரி பொறுப்பில் இருந்து எடியூரப்பா ராஜினாமா செய்துள்ளார். ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளார்.
Info
Ads
Latest News
Ads