Category:
Created:
Updated:
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இடையே விஷேட கலந்துரையாடல் ஒன்று நாளை (26) நடைபெறவுள்ளது.
நாளை காலை 11.00 மணிக்கு இந்த கலந்துரையாடல் நடைபெறும் என இலங்கை ஶ்ரீலங்கா கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.
குறித்த கலந்துரையாடலுக்கு முன்னர், கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாட திட்டமிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.