இரவு நேரத்தில் வீடு புகுந்து மூதாட்டியிடம் செயின் பறிப்பு
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பவழ நகரை சேர்ந்துவர் சிவசண்முகம். இவர் தனது தாய் ராஜவேனி உடன் வசித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு ராஜவேனி வீட்டில் அமர்ந்திருந்த போது மர்ம நபர் ஒருவர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் தங்க செயினை அறுத்து கொண்டு சென்றுள்ளார்.
இது குறித்து சிவசண்முகம் ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து யார்யார் அவர்கள் வீட்டுக்கு வந்து சென்றனர் என்ற கோணத்தில் விசாரணை செய்தனர்.
சில தினங்களுக்கு முன்னர் குமார் என்ற நபர் அவர்கள் வீட்டின் மேல் பகுதிக்கு பெயிண்ட் அடிப்பதற்காக வந்து சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து வாழைக்குளம் பகுதியை சேர்ந்த குமாரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரரணையில் குமார் தான் பெயிண்ட் வேலைக்கு சென்ற போது மூதாட்டியின் கழுத்தில் இருந்த தங்க செயினை நோட்டமிட்டு, இரவு மூதாட்டி வீட்டில் தனியாக இருந்த போது தங்க செயினை அறுத்து சென்றதாகவும், அறுத்து சென்ற செயினை அடகு கடையில் 27000 ஆயிரம் ரூபாய்க்கு அடக்கு வைத்து பணத்தை தனது சொந்த செலவிற்கு பயன்படுத்தி உள்ளதாக ஒப்புகொண்டான்.
அடமானத்தில் இருந்த செயினை மீட்ட போலீசார் அவனின் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிந்து குமாரை சிறையில் அடைத்தனர்.