என்பு முறி, நெரிவு சிகிச்சைகளிற்கான பொது வைத்தியசாலைக்கான இரு நோயாளர் விடுதிகள் இன்றைய தினம் கையளிக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கான இரு நோயாளர் விடுதிகள் இன்றைய தினம் கையளிக்கப்பட்டது. எஸ்.கே அறக்கட்டளையின் ஸ்தாபகர் எஸ் கே நாதன் அவர்களின் 55 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட இரு நோயாளர் விடுதிகளே இவ்வாறு இன்றைய தினம் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டது.
குறித்த நகழ்வு இன்று காலை 11 மணியளவில் வைத்தியசாலை பணிப்பாளர் எஸ்.சுகந்தன் தலைமையில் ஆரம்பமானது. குறித்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட பிரதி நீர்பாசன பொறியியலாளர் என்.சுதாகரன், வவுனியா மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் எஸ்.ராகுலன், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.சுமார் 27.5 மில்லியன் செலவில் என்பு முறி, நெரிவு சிகிச்சைகளிற்கான வைத்திய விடுதி மற்றும் 27.5 மில்லியன் செலவிலான கண் சிகிச்சை மருத்துவ விடுதி ஆகியனவே இன்று பகல் 12 மணிக்கு வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.