Ads
டயகம சிறுமி மரணம் - ரிஷாத்தின் மனைவி உட்பட மூவர் கைது
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி, சிறுமியை வேலைக்கமர்த்திய தரகர் மற்றும் மற்றுமொரு நபர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஹட்டன், டயகம பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடைய சிறுமி ஒருவர் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த தினம் உயிரிழந்து விட்டார்.குறித்த மரணம் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளுக்கு அமைய நேற்றைய தினம் பொரளை பொலிஸார் ரிஷாத் பதியுதீனின் வீட்டிற்கு சென்று அவரது மனைவிடம் வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர். இதனை அடுத்து குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமாகிய அஜித் ரோஹண தெரிவித்தார்.
Info
Ads
Latest News
Ads