Ads
யாழ்ப்பாணம் செல்கிறார் பிரதமர்
இலங்கையின் 100 நகரங்களை பல் பரிமாண நகரமாக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தினை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பதற்காக, பிரதமர் மஹிந்த ராஜபக்ச யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார்.
ஜூலை மாதம் 31ம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ள அவர், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் வேலணை நகரத்தில் இடம்பெறும் பல்பரிமாண நகர தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு, திட்டத்தை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
Info
Ads
Latest News
Ads