இலங்கை ஆசிரியர் சங்க உறுப்பினர்களை தனிமைப்படுத்தலிருந்து உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் உட்பட இலங்கை ஆசிரியர் சங்க உறுப்பினர்களை தனிமைப்படுத்தலிருந்து உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அரசியல் ஆய்வாளரும் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் பொதுச் செயலாளருமான சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக மையத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொழும்பில் இடம் பெற்ற சேர் ஜோன் கொத்தலாவ பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்தை உடன் வாபஸ் பெற வேண்டும் என எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றம் மூலம் பிணையில் விடுதலை செய்யப்பட்ட போதும் அவர்கள் பலவந்தமாக அழைத்துவரப்பட்டு முல்லைத்தீவு கேப்பாபுலவு விமான படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களையே உடனடியாக. விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் , சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு சட்டமூலம் வாபஸ்பெறப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.