எல்லை தாண்டிய இந்திய மீனவர்களால் யாழ் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் தலைவர் தெரிவித்தார்.
மீண்டும் எல்லை தாண்டிய இந்திய மீனவர்களால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் தலைவரும் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் உப தலைவருமான நாகராசா வர்ணகுலசிங்கம் தெரிவித்தார் .
கடந்த இரண்டு மாத காலமாக வடக்கு கடலில் எல்லை தாண்டிய இந்திய மீனவர்களின் அத்துமீறல் இல்லாத நிலை காணப்பட்டதாகவும் நேற்றிலிருந்து மீண்டும் இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடி வடக்கு கடற் பகுதியில் இடம்பெறுவதாகவும் இதனால் தமது நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் கடல் தொழில் உபகரணங்கள் சேதம் அடைந்துள்ளதாகவும் இது தொடர்பாக பல காலமாக இலங்கை இந்திய பிரதிநிதிகளுடன் பேசியும் எந்தவிதமான இழப்பீடுகளோ நிவாரணங்களோ கிடைக்கவில்லை என்றும் தற்போதும் மீண்டும் எல்லை தாண்டிய இந்திய மீனவர்களினால் பாதிக்கப்படுவதாகவும் தொடர்ந்தும் இவ்வாறு தமது வாழ்வாதாரத்தை மீனவர்கள் இழக்க முடியாது என்றும்ஏனவே எல்லை தாண்டிய இந்திய மீனவர்களை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு ஜனாதிபதி பிரதமர் மற்றும் மீன்பிடி அமைச்சரை கேட்டுக் கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்