சினிமா செய்திகள்
42 வயதில் நடிகை அனுஷ்கா திடீர் திருமணம்..?
பில்லா, வேட்டைக்காரன், சிங்கம், வானம், தெய்வத்திருமகள், சகுனி, தாண்டவம், அலெக்ஸ் பாண்டியன், இரண்டாம் உலகம், சிங்கம் 2, லிங்கா, என்னை அறிந்தால் ருத்ரமா
கவர்ச்சி போஸ் கொடுத்த ஷிவானி நாராயணன்
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கடைக்குட்டி சிங்கம்' என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக தன்னுடைய டீனேஜ் வயதிலேயே அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அத
ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் அசத்தும் அழகில் மாளவிகா மோகனன்
ஈரானிய இயக்குனர் மஜித் மஜிது இயக்கிய பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தின் மூலம் நல்ல அறிமுகம் பெற்ற மாளவிகா மோகனன், அதன் பிறகு தமிழில் மாஸ்டர், பேட்ட மற்றும
நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாலும், படு கிளாமரான உடையில் அசத்தும் நடிகை அமலா பால்
சமூக வலைத்தளங்களிலும் புதிய படங்களில் நடிக்க வேண்டும் என்று எண்ணத்தில் அடிக்கடி கவர்ச்சி மிகு புகைப்படங்களை வெளியிடுவதில் அதிக அளவு ஆர்வம் காட்டி வரும
கிளாமர் உடையில் ராஷ்மிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம்
இந்திய அளவில் தற்போது பிரபலமான நடிகையாக ராஷ்மிகா இருந்தாலும், அவரின் சினிமா வாழ்க்கை தொடங்கியது கன்னட சினிமாவில்தான். அடுத்தடுத்து பன்மொழிப் படங்களில்
பிரபாஸ் படத்தில் நடிகராக அறிமுகமாகிறார் ராஜமௌலி
கமல்ஹாசன்,பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கும் பிராஜக்ட் கே படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் நடிக்க 20 நாட
அறியப்படாத படம் - இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல்
1980 கால கட்டங்களில் வெளியான படங்களில் இடம்பெற்ற பாடல்கள் பெரும்பாலும் ஹிட் ஆயிருக்கும். அதற்கு காரணம் இசை, பாடியவரின் குரல் வளம் உள்ளிட்ட பல காரணங்கள
நடிகர் சூரி சமீப காலமாக ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும் ’விடுதலை’ படத்தின் வெற்றியை அடுத்த அவர் ’விடுதலை 2’ ’கொட்டுக்காளி’ ’கருடன்’ உள்பட சில படங்க
நகைச்சுவை மன்னன் நாகேஷ்
அவர் காமெடி செய்யும் முன்பே நாம் சிரிக்க ஆரம்பித்து விடுவோம். அந்த அளவுக்கு நகைச்சுவையில் கொடிகட்டிப் பறந்தவர் தான் நாகேஷ். இவர் படத்தில் தான் இப்படி.
‘எலக்சன்’ திரைப்படத்தின் புதிய பாடல் வெளியீடு
‘உறியடி’ புகழ் நடிகர் விஜய்குமார் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘எலக்சன்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தீரா..’ எனத் தொடங்கும
நீச்சல் உடையில் அசத்தும் அழகில் பிரணிதா சுபாஷ்
மிகவும் அழகான நடிகையாக, பார்த்தவுடன் மனதை கவரும் ஒரு வசீகரத் தோற்றத்தில் உள்ள பிரணிதா சுபாஷ், பெங்களூருவைச் சேர்ந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழி
உள்ளாடை அணியாமல் அழகு காட்டிய  ரெஜினா கசாண்ட்ரா
தொடர்ந்து படங்களில் நடித்து வரும் ரெஜினா கசாண்ட்ரா, பொது நிகழ்ச்சிகளுக்கு வரும் போது, உடையில் தாராளமான கவர்ச்சி காட்டுகிறார். அவர் அணிந்திருக்கும் கவர
Ads
 ·   ·  7578 news
  •  ·  5 friends
  • I

    9 followers

தலைவர் பதவியுடன் கமல்ஹாசனுக்கு பொதுச் செயலாளர் பதவியும்

சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து  மகேந்திரன், சந்தோஷ் பாபு, முருகானந்தம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் விலகினர். மக்கள் நீதி மய்யம் கட்சியை வலுப்படுத்தத் தேவையான மாற்றங்களைச் செய்வேன் என  கமல்ஹாசன் கூறி இருந்தார்.

 

கட்சி உறுப்பினர்களும், நிர்வாகிகளும் தங்களது உடல்நலனில் முழு கவனம் செலுத்த வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் உடனடியாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

 

மண், மொழி, மக்கள் காக்க களம் கண்ட நமது கட்சியை வலுப்படுத்தவும், நமது கொள்கைகளை, செயல் திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும் சில புதிய நியமனங்களைச் செய்திருக்கிறேன். அதன்படி, கட்சியின் தலைவர் எனும் பொறுப்புடன் கூடுதலாகக் கட்சியின் பொதுச் செயலாளர் எனும் பொறுப்பினையும் ஏற்றுப் பணியாற்ற இருக்கிறேன்.

 

புதிதாக இரு அரசியல் ஆலோசகர்கள், இரண்டு துணைத் தலைவர்கள், மூன்று மாநிலச் செயலாளர்கள், நிர்வாகக் குழுவில் மேலும் ஒரு உறுப்பினர், நற்பணி மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

 

புதிய மாநிலச் செயலாளர்கள் ஏற்கெனவே நமது கட்சியின் வேட்பாளர்களாகக் கடந்த சட்டச்பை தேர்தலில் களம் கண்டவர்கள்தான். எனினும், அவர்களைப் பற்றி மீண்டும் இங்கே குறிப்பிடக் கடமைப்பட்டுள்ளேன்.

 

சிவ.இளங்கோ சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் நிறுவனர். மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அநீதிகளுக்கு எதிராகச் சட்டப் போராட்டங்களைத் தொடர்ந்த காரணத்தால் ஆட்சியாளர்களால் வேட்டையாடப்பட்டு சிறை சென்றவர்.

 

செந்தில் ஆறுமுகம் தகவல் தொழில்நுட்பத் துறையில் 7 ஆண்டுகள் பணிபுரிந்துவிட்டு சமூகப் பணி செய்ய வேண்டும் என்ற தனது லட்சியத்திற்காக பணியை ராஜினாமா செய்தவர். 'நேர்மையான அரசியலின் மூலம் நல்லாட்சி' மலர வேண்டும் என்ற நோக்கத்தோடு கடந்த 20 ஆண்டுகளாக உழைத்து வருபவர். சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச் செயலாளர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை முழுமையாகப் பயன்படுத்துவது என மக்கள் நலன் சார்ந்து தொடர்ந்து இயங்கி வருகிறார்.

 

சரத்பாபு தன் கடின உழைப்பாலும், திறமையாலும் வெற்றிகரமான தொழில்முனைவோராகத் திகழ்பவர். புட் கிங் அறக்கட்டளையை நிறுவி பசியோடு இருப்பவர்களுக்கு உணவு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சமூகப் பணிகளைச் செய்து வருகிறார்.

 

புதிய நியமனங்கள்:

 

1. பழ.கருப்பையா - அரசியல் ஆலோசகர்

2. பொன்ராஜ் வெள்ளைச்சாமி - அரசியல் ஆலோசகர்

3. ஏ.ஜி.மவுரியா - துணைத் தலைவர் - கட்டமைப்பு

4. தங்கவேலு - துணைத் தலைவர் - களப்பணி மற்றும் செயல்படுத்துதல்

5. செந்தில் ஆறுமுகம் - மாநிலச் செயலாளர் - தகவல் தொழில்நுட்பம் & செய்தித் தொடர்பு

6. சிவ.இளங்கோ - மாநிலச் செயலாளர் - கட்டமைப்பு

7. சரத்பாபு - மாநிலச் செயலாளர் - தலைமை நிலையம்

8. ஸ்ரீப்ரியா சேதுபதி - நிர்வாகக் குழு உறுப்பினர்

9. ஜி.நாகராஜன் – நற்பணி இயக்க ஒருங்கிணைப்பாளர்

 

மக்கள் சேவைக்காக வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட தலைமைப் பண்புமிக்க இவர்களை என்னோடு சேர்ந்து நீங்களும் வாழ்த்தி வரவேற்பு செய்யுங்கள். முழு ஒத்துழைப்பை நல்குங்கள். இவர்கள் உங்களோடு சேர்ந்து உழைத்துக் கட்சியினை வலுவாக்குவார்கள். உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. அதற்கு நாம் தயாராக வேண்டும் என கமல்ஹாசன் பேசினார்.

  • 523
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads