
பாராளுமன்றத்தில் சூடான உரையாற்றனார் ரணில்
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள ஒரே வழி சர்வதேச நாணய நிதியத்துடன் பரிவர்த்தனை மேற்கொள்வதே ஆகும் என பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினராக இன்று (23) காலை சபாநாயகர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்ட பின்னர் பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்.
கடந்த காலம் தொடர்பில் பேசி நாட்டை மீள கட்டி எழுப்ப முடியாது என தெரிவித்த அவர், சர்வதேச நாணய நிதியத்துடன் பரிவர்த்தனை மேற்கொள்ள அரசாங்கத்திற்கு விருப்பமில்லை என்றால் அதற்கான மாற்று நடவடிக்கை என்ன என்பது தொடர்பில் வௌிப்படுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.
இதுவரை பல பிரச்சினைகள் ஒன்று சேர்ந்துள்ளதாக தெரிவித்த அவர், இந்த விவகாரம் குறித்து பேச பாராளுமன்றத்தினுள் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.