Ads
முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் லீலைகள் அம்பலம்
நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை தேடி வந்த நிலையில் பெங்களூரில் கைது செய்தனர். இதனை அடுத்து அவர் சென்னைக்கு அழைத்துவரப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
முன்னாள் அமைச்சர் மணிகண்டனை சென்னை அடையாறு அனைத்து மகளீர் காவல் துறையினர் விசாரணை செய்ததாக தெரிகிறது. பின்னர் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் பறிமுதல் செய்யப்பட்ட 2 செல்போன்களில் இருந்து, நடிகையுடன் நிர்வாணமாக இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Info
Ads
Latest News
Ads