தினம் தினம் டார்ச்சர் போலீஸ் கணவன் மீது மனைவி பரபரப்பு புகார்
மதுரை நாராயணபுரம் சிவமணி தெருவைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான சுபாஷினி என்பவருக்கும் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ராஜமாணிக்கம் என்பவரது மகன் முத்துசங்கு என்ற காவலருக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின் போது முத்து சங்கு சார்பு ஆய்வாளராக வேலை செய்கிறார் என பொய் சொல்லி உள்ளதாக தெரியவருகிறது. திருமணத்தின் போது வரதட்சணையாக ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் 25 சவரன் தங்க நகைகள் பெண் வீட்டின் சார்பாக கொடுக்கப்பட்டுள்ளது,
திருமணமான 3 மாதத்தில் மேலும் வரதட்சணை பணம் கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து இருவரும் பிரிந்து தனித்தனியாக இருந்துள்ளனர். காவலர் முத்துசங்கு மீது தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆண்டு 2020ம் ஆண்டு புகார் செய்யப்பட்டது. ஆனால் முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு பாதுகாப்பு பணியில் இருப்பதாக கூறி புகாருக்கு பதில் கூறாமல் இருந்து வந்துள்ளார்.
காவலர் முத்து சங்கு மனைவியின் பெற்றோருடன் கடந்த பத்து தினங்களுக்கு முன்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.. இதனை நம்பி கணவருடன் சென்ற சுபாஷினியை பல்வேறு வகையில் பாலியல் துன்புறுத்தல் செய்து உள்ளார்.
அவரது மொபைல் போனை சுபாஷினி ஆய்வு செய்த போது பல பெண்களுடன் ஆபாசமாக பேசியது, ஆபாசமாக மெசேஜ் அனுப்பியது ஆபாசமான படங்களையும் வீடியோக்களையும் பல பெண்களுக்கு ஷேர் செய்து பேசி வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
சுபாஷினி இன்று மதுரை மாநகர காவல் ஆணையரிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தும் கணவர் முத்து சங்கு மீது தக்க நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இது குறித்து துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்துள்ளனர்.