
நெதர்லாந்தில் பெரும்பாலான கொவிட்-19 கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு
நெதர்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுப் பரவல் கணிசமாக குறைந்துள்ள நிலையில், எதிர்வரும் 26ஆம் திகதி முதல் பெரும்பாலான கட்டுப்பாடுகளை தளர்த்த அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பெரும்பாலும் நெதர்லாந்து முழுவதும் முகக்கவங்கள் அணியத் தேவையில்லை என்ற போதிலும், சமூக இடைவெளி 1.5 மீட்டர் பின்பற்ற வேண்டும்.
குழு அளவுகளில் பெரும்பாலான வரம்புகள் ஜூன் 26ஆம் திகதி முதல் நீக்கப்படும். கடைகளை மூடுவதற்கான நேரம் வரையறுக்கப்படாது. மது பானத்திற்கு தடை இல்லை.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை பரிசோதித்து இரவுநேர விடுதிகள் செயற்படலாம். இதேபோன்ற பரிசோதனைகளை செய்யும் கொரோனா பரிசோதனை செயலியை பின்பற்றி திரையரங்குகள் அருங்காட்சியகங்களில் கூடுதல் நபர்களை அனுமதிக்கலாம்.
அத்துடன் ஜூன் 1ஆம் திகதி, கொவிட்-19 உயர் ஆபத்துள்ள நாடுகளுக்கு விதிக்கப்பட்ட விமானத் தடையை நீக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.