சினிமா செய்திகள்
மகனிடம் இருந்து  கற்றுக் கொண்டேன் - ஜெனிலியா
தமிழில் ஜெனிலியா சந்தோஷ் சுப்ரமணியம், சச்சின், உத்தமபுத்திரன், வேலாயுதம் போன்ற படங்களில் நடித்து மக்கள் மனதை வென்றார். இந்த படங்கள் இவருக்கு சினிமாவில
இந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகர் யார் தெரியுமா?
இந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகர்கள் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது. இதற்கு முன் இந்த பட்டியலில் முதல் இடத்தில் விஜய் இருந்தார். ஆனால், தற்போது வி
தனது வருங்கால கணவர் யார் என வெளிப்படையாக கூறினார் ராஷ்மிகா
புஷ்பா 2 படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகை ராஷ்மிகாவிடம் தொகுப்பாளினி, ‘நீங்கள் சினிமாத்துறையில் உள்ளவரை திருமணம் செய்துக் கொள்வீர்களா? அல்லது சி
ராஷ்மிகா தனது காதலர் உடன் ஹோட்டலில் சாப்பிடும் போட்டோ வைரல்
நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது இந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வருகிறார். அனிமல் படத்தின் வெற்றிக்கு பிறகு அவருக்கு ஹிந்தியில் அதிகம் ரசிகர்கள
சிவகார்த்திகேயன் மிகவும் திறமையானவர் என தெரிவித்த ரம்யாகிருஷ்ணன்
அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்துள்ளது. உலக அளவில் அமரன் படம் ரூ. 300 கோடி அளவில் வசூல் செய்துள்ளது.சிவக
பொய்யான தகவல்கள் பகிர்வதை தவிர்க்கவும் - ஏஆர்.ரஹ்மான் மகன்
ஏஆர்.ரஹ்மான் தனது மனைவி சாய்ரா பானுவை விவாகரத்து செய்யப்போவதாக சமீபத்தில் அறிவித்த செய்திகள் ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.சமூக வலைதளங்களில் இந்த
ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்துக்கான காரணத்தை சொன்ன வக்கீல்
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி ஹாலிவுட் வரை கொடிக்கட்டி பறப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் கடந்த 1995ம் ஆண்டில் சாய்ரா பானு என்பவரை திருமணம் செய
பிரிவதில் உறுதியாக இருப்பதாக நீதிபதியிடம் கூறிய தனுஷ் மற்றும் ஜஸ்வர்யா
கடந்த 2004 ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா திருமணம் நடந்த நிலையில், இருவரும் பிரிவதாக முடிவெடுத்து, நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்தனர்.  
 ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் விவாகரத்து
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் விவாகரத்து செய்வதாக நேற்று அறிவித்தனர். இதனையடுத்து இந்திய திரையுலகமே அதிர்ச்சியடைந்தது. இரு
சிறையில் தூக்கமின்றி தவிக்கிறார் நடிகை கஸ்தூரி
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை கஸ்தூரி, முதல் நாளில் தூக்கமின்றி தவித்ததாக சொல்லப்படுகிறது. சிறையில் அவருக்கு வழங்கப்பட்ட உணவையும் குறைந
பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் ரிலீஸானது நயன்தாராவின் கல்யாண கேசட்
இயக்குர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகர் நயன்தாரா திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடைபெற்ற இந்த திருமணத்தின் வீடியோ ஒரு ஆவணப்படமாக உருவாக
தனுஷ் குறித்து நயன்தாரா வெளியிட்ட அறிக்கையால் பரபரப்பு
தனுஷ் குறித்து நயன்தாரா வெளியிட்ட அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த அறிக்கையில், திரு தனுஷ், பல தவறான விஷயங்களை நேர்மையாக சரி செய்வதற்காக இந்த
Ads
 ·   ·  678 news
  •  ·  16 friends
  • S

    23 followers

இந்த அரசாங்கம் ஏழைகளின் கண்ணீரில் சவாரி செய்து கொண்டிருக்கின்றது அம்பாறையில் சிறீதரன் எம் பி

எரிபொருள் விலையேற்றத்தினூடாக மக்களின் உணவிலும் வாழ்க்கையிலும் பாரிய அளிவில் இந்த அரசாங்கம் கை வைத்திருக்கின்றது. மிகப் பெரிய அளவில் இந்த நாட்டு மக்களைப் படுகுழியில் தள்ளுகின்ற வேலையை இந்த அரசாங்கம் செய்து கொண்டிருக்கின்றது. தங்களுடைய தெரிவும் இனவாத அடிப்படையில் அவர்கள் அளித்த வாக்கும் எவ்வளவு கேவலமான முடிவு என சிங்கள மக்கள் எண்ணத் தொடங்கியுள்ளார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.கனடாவில் வசிக்கும் செந்தில்குமரன் நிவாரணம் அமைப்பின் ஊடாக கனடா வாழ் மக்களின் நிதி உதவியின் மூலம் இன்றைய தினம் அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேசத்தில் கொரோனா நிலைமையால் பாதிப்புற்ற வறிய குடும்பங்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் அன்றாடம் உழைத்து வாழும் மக்களின் பொருளாதார நலிவு நிலையைச் சமாளிக்கும் வகையில் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் செயற்பாட்டின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தொவித்தார்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

பெற்றோல் விலையேற்றம் தொடர்பில் இன்று நாட்டில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. கடந்த ரணில் மைத்திரி அரசு இருந்த போது குறிப்பிட்ட ஆறு, ஏழு ரூபா விலைச் சூத்திரத்தில் விலையேற்றம் இடம்பெற்றதைக் காரணம் காட்டி நாட்டின் இன்றைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் துவிச்சக்கர வண்டியில் பாராளுமன்றத்திற்கு வந்தார். ஆனால் இன்று அவர்களால் ஒரு லீட்டர் பெற்றோல் 20 ரூபா, டீசல் 12 ரூபா, மண்ணெண்ணெய் 7 ரூபா வரையும் விலையேற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. மிகப் பெரிய அளவில் இந்த நாட்டு மக்களைப் படுகுழியில் தள்ளுகின்ற வேலையை இந்த அரசாங்கம் செய்து கொண்டிருக்கின்றது.உலகத்திலே, ஆசியாவிலே ஏனைய நாடுகளை விட இங்குதான் பெற்றோல் விலை குறைவென்று அவர்கள் சொன்னாலும் அந்த நாடுகளில் இருக்கின்ற அரிசி, மா மற்றும் ஏனைய உணவுப் பொருட்களுடன் ஒப்பிடுகையில் நமது நாட்டில் அவற்றின் விலை அதிகமாக இருக்கின்றது. இங்கு எரிபொருளின் விலையேற்றம் என்பது தனியே எரிபொருளுக்கு மாத்திரமல்ல எரிபொருளைப் பயன்படுத்துகின்ற போக்குவரத்தில் இருந்து உணவுத் தயாரிப்பு என விலை அதிகரிப்பு இடம்பெறும். தற்போது எரிவாயுவுக்கான விலையும் அதிகரிக்க இருப்பதாகவும் தகவல்கள் இருக்கின்றது.எனவே மக்களின் உணவிலும் வாழ்க்கையிலும் பாரிய அளவில் இந்த அரசாங்கம் கை வைத்திருக்கின்றது. இந்த அரசாங்கமானது மூழ்கும் நிலையிலுள்ள கப்பலுக்குச் சமமானதாகவே இருக்கின்றது. அது மூழ்குகின்ற நிலையிலும் நீரோ மன்னன் பிடில் வாசித்ததைப் போன்று இந்த நாட்டின் தலைவர் ஏழைகளின் கண்ணீரிலே பிடில் வாசித்துக் கொண்டிருக்கின்றார். அதேபோல் அவரின் அரசாங்கம் ஏழைகளின் கண்ணீரில் சவாரி செய்து கொண்டிருக்கின்றது.சிங்களம், தமிழ், முஸ்லீம் மக்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இன்று சிங்கள மக்கள் வெறுப்படைந்து போயிருக்கின்றார்கள். தங்களுடைய தெரிவும் இனவாத அடிப்படையில் அவர்கள் அளித்த வாக்கும் எவ்வளவு கேவலமான முடிவு என்று அவர்கள் நினைக்கும் அளவிற்கு இந்த அரசின் செயற்பாடுகள் அவர்களுடைய மனநிலைகளைப் புரிய வைத்திருக்கின்றது.இன்று இந்த நாட்டின் தலைவரின் தலைமையிலான இந்த அரசு பெற்றோல் விலையேற்றத்தினூடாக எல்லா மக்களுடைய அடிப்படை வாழ்வையும் ஆட்டங்காண வைத்திருக்கின்றது. அதிலும் இந்தக் கொரோனா நோய் பரவியிருக்கின்ற சூழலில் வாழ்வாதாரத்திற்காக ஏங்குகின்ற அன்றாடம் உழைத்து வாழும் மக்களின் வாழ்க்கையெல்லாம் கேள்விக் குறியாக இருக்கின்ற போது எரிபொருள் விலையேற்றம் இன்னும் இன்னும் அவர்களைப் படுபாதாளத்திற்குள் தள்ளியிருக்கின்றது என்று தெரிவித்தார்.

இதன் போது அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் மற்றும் பொத்துவில் பிரதேசசபை உபதவிசாளர் பார்த்தீபன் மற்றும் பிரதீபன் உட்பட தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட இளையஞரணியினர் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

  • 544
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads