சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  678 news
  •  ·  17 friends
  • S

    24 followers

கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலைக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை ஒத்துழைப்பு இல்லை என சுகாதார தரப்பு மன்றில் சாட்சியம் வழங்கியுள்ள நிலையில், சுகாதார தரப்புக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும் தொழிற்சாலை நிர்வாகத்திற்கு  கட்டளை பிறப்பித்துள்ளது.

கடந்த 10ம் திகதி கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களின் ஊடாக சமூக தொற்று பரவும் அபாயம் காணப்படுவதாக தெரிவித்து கரைச்சி பிரதேச சபை வழக்கு தாக்கல் செய்திருந்தது.

அதேவேளை பொது நல வழக்கொன்றினையும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளால் மன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இரு வழக்குகளையும் ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் சுகாதார தரப்பின் அறிக்கையினை கோரியிருந்தது.

குறித்த இரு வழக்குகளும் மன்றில் எடுத்துக்கொண்ட நீதிபதி விசாரணை மேற்கொண்டார். இதன்போது ஆடைத்தொழிற்சாலை சார்பில் சட்டத்தரணிகளும் ஆயராகியிருந்தனர். நேற்றைய தினம் 14ம் திகதி கரைச்சி பிரதேச சபைக்கு தொழிற்சாலை நிர்வாகத்தினால் கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளதாகவும், சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடித்தும், தொற்று நோய் கட்டுப்படுத்தலை முறையாக பேணும் வகையிலும் தொழிற்சாலை நிர்வாகம் கடிதம் ஒன்றை பிரதேச சபைக்கு வழங்கியிருந்தது.

குறித்த கடிதத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமிடத்து குறித்த வழக்கினை முடிவுக்கு கொண்டு வர முடியும் என பிரதேச சபை சார்பில் ஆயராகியிருந்த சட்டத்தரணிகள் மன்றில் தெரிவித்தனர். அதற்கு அமைவாக இரு தரப்பும் இணக்கம் தெரிவித்ததற்கு அமைவாக குறித்த வழக்கினை முடிவுக்கு கொண்டு வருவதாக நீதிபதி குறிப்பிட்டார்.

இதேவேளை இன்றைய தினம் சுகாதார தரப்பினரை அழைத்திருந்த நீதிமன்று அவர்களது நிலைப்பாடுகளையும் கேட்டறிந்தது.

அதற்கு அமைவாக இன்றைய தினம் மன்றில் சமூகமளித்திருந்த கரைச்சி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி மன்றில் ஆடைத்தொழிற்சாலை நிலவரம் தொடர்பிலும், தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு தொழிற்சாலை நிர்வாகம் ஒத்துழைப்பது இல்லை என்ற விடயத்தினையும் தெரிவித்தார். ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களின் விபரம், குழுக்களின் விபரம், போக்குவரத்து முறைகள், தங்குமிட விபரம் உள்ளிட்ட விடயங்களை கேட்டிருந்த போதும் அவர்கள் உரிய நேரத்தில் தரவில்லை எனவும், விடியல் நிறுவனம் கடந்த 15 நாட்கள் அளவிலேயே வழங்கியதாகவும் குறிப்பிட்டார்.

அதனால் தனிமைப்படுத்தல் விதிகளை பேண முடியாதுள்ளதாகவும், தொற்றாளர் ஒருவர் பழகிய, அல்லது நெருக்கமானவர்களை அடையாளம் காண முடியாத நிலை காணப்படுவதாகவும் இதன்போது மன்றில் குறிப்பிடப்பட்டது.விசாரணைகளை மேற்கொண்ட நீதிபதி, சுகாதார வைத்திய அதிகாரியினால் குறிப்பிடப்பட்ட விடயங்களை உள்ளடக்கிய கட்டளையை இன்று பிறப்பித்திருந்தார்.

தொழிற்சாலை ஊழியர்களின் விபரம், குழுவாக பணி புரிவதால் குழுக்களின் விபரம் வழங்கும்படியும், குழுக்களில் மாற்றங்கள் ஏதும் மேற்கொள்ளப்பட்டால் அது தொடர்பிலான தகவலை  வழங்குமாறும் மேலும் தொழிற்சாலை ஊழியர்கள் தங்கியுள்ள பகுதிகள், போக்குவரத்து முறைகள் உள்ளிட்ட தகவல்களை சுகாதார வைத்திய அதிகாரிக்க வழங்குமாறும் கட்டளை பிறப்பிக்கப்பட்டதுடன், குறித்த தகவல்களை ஊரிய முறையில் இரகசியம் பேணப்படும் வகையில் சுகாதார வைத்திய அதிகாரி முழுமையாக தனது பொறுப்பில் வைத்திருக்க வேண்டும் எனவும் கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தொழிற்சாலை ஊழியர்களிற்கான ஆன்டியன் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான ஒத்துழைப்பினை வழங்கும் படியாகவும், ஏற்கனவே விபரங்களை வழங்கியுள்ள விடியல் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு அதன் அறிக்கையை புதன் அல்லது வியாளக்கிழமை தொழிற்சாலை நிர்வாகத்திற்கு வழங்குமாறும், வானவில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் மற்றம் பணியாளர்களிற்கான பரிசோதனையை வியாழன்  மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மேற்கொண்டு சனிக்கிழமை அறிக்கையை வழங்குமாறும் மன்று கட்டளை இட்டுள்ளது.அதற்கு அமைவாக குறித்த இரு ஆடைத் தொழிற்சாலைகளின் ஊழியர்கள் மற்றும் பணியாளர்களிற்கான பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் தொழிற்சாலைக்கு பணியில் அமர்த்தக் கூடியவர்கள் தொடர்பான தகவல்களை சனிக்கிழமை தொழிற்சாலை நிர்வாகத்தினருக்கு வழங்குமாறும், ஞாயிற்றுக்கிழமையின் பின்னர் தொழிற்சாலையை இயக்குமாறும் மன்று கட்டளை பிறப்பித்துள்ளது.விடயங்களை தொழிற்சாலைகளிற்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களிற்கு அமைவாக அதேவேளை தொழிற்சாலை சுத்திகரிப்பு முறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பேண வேண்டும் எனவும் மன்று கட்டளை பிறப்பித்துள்ளது.இரு தரப்பினரும் குறித்த நடைமறைகள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டியுள்ளமையால் குறித்த வழக்கினை முடிவுறுத்துவதாகவும், வழக்கின் தீர்மானத்திற்கு அமைவாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்களை மன்றுக்கு எதிர்வரும் 23ம் திகதி அறிக்கையிடுமாறும் மன்று இன்று தீர்ப்பளித்துள்ளது.அதற்கு அமைவாக எதிர்வரும் சனிக்கிழமை வரை கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள மாஸ் கோல்டன் நிறுவனத்தின் வானவில், விடியல் எனும் இரு ஆடைத் தொழிற்சாலைகளும் மூடப்பட்டு ஊழியர்கள் மற்றும் பணியாளர்களிற்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகளின் அடிப்படையிலேயே ஞாயிற்றுக்கிழமை முதல் தொழிற்சாலைகள் இயங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.குறித் இரு வழக்குகளையும் இருதரப்பினரின் இணக்கப்பாட்டுக்கு அமைவாக மன்று முடிவுக்கு கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

  • 628
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads