செந்தில் குமரனின் நிவாரண அமைப்பு 11 லட்சம் பெறுமதியான உலர் உணவு பொருட்களை நிவாரணமாக கிளிநொச்சி மக்களுக்கு வழங்கி உள்ளது.
நாட்டில் தற்பொழுது அமுலில் இருக்கும் பயணத்தடை காரணமாக வறிய மக்கள் கடும் சிரமத்தை எதிர்நோக்கி உள்ளனர்.பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் பட்டினியாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.மக்களின் வறுமையை போக்கும் விதமாக புலம்பெயர் உறவுகள் தனிப்பட்ட ரீதியாகவும், ஊர்சங்கங்களின் ஊடாகவும், நிறுவனங்களின் ஊடாகவும் பல விதமாக உதவி வருகின்றனர்.அந்த ரீதியில், கனடாவில் பல காலமாக தமிழ் மக்களின் பெரும் ஆதரவுடன் இயங்கி வரும் மின்னல் செந்தில் குமரனின் நிவாரண அமைப்பு 11 லட்சம் பெறுமதியான உலர் உணவு பொருட்களை நிவாரணமாக கிளிநொச்சி மக்களுக்கு வழங்கி உள்ளது.இதன் தொடர்ச்சியாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் முன்னிலையில் பளை (250), பிரமந்தனாறு (250) பகுதிகளை சேர்ந்த பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு நிவாரண பொதிகள் இன்றைய தினம் வழங்கிவைக்கப்பட்டன.பூநகரி பகுதியில் 250 குடும்பங்களுக்கு செந்தில் குமரனின் நிவாரண நிதியத்தின் ஊடாக பாரளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் நிவாரண உதவிகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.மேலும் பல மாவட்டங்களில் செந்தில் குமரனின் நிவாரன உதவி தொடர இருப்பதாக அறியப்படுகிறது.