Category:
Created:
Updated:
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு கரும்புள்ளியான் பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு தயாரிப்பு இடம்பெற்று வந்த இடம் முற்றுகையிடப்பட்டதில் 43 வயது நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து கோடா கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்தி உபகரணம் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளது.முல்லைத்தீவு மாந்தை கிழக்கு கரும்புள்ளியான் பகுதியில்
கசிப்பு காய்ச்சும் தொழிலில் ஈடுபட்ட நிலையில் சனிக்கிழமை (12 June 2021) மாலை ஒருவர் கைதானதாக நட்டாங்கண்டல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விமலவீர தெரிவித்தார்தமக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சோதனை செய்ததில் கசிப்பு காய்ச்சுவதற்காக பயன்படுத்தக்கூடிய கோடா உட்பட ஸ்பிரிட் 2லீற்றரும் கைப்பற்றப்பட்டுள்ளன.சந்தேக நபர் 43 வயதுடையவர் என்றும் தெரிவித்தார்.