Category:
Created:
Updated:
கிளிநொச்சி மருதநகர் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 14 பேர் பொலிஸாரிடம் சிக்கிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 04 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாவும் மீட்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (13 ) இடம்பெற்றுள்ளது.கிநொச்சி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.இதேவேளை குறித்த நபர்களுக்கு எதிராக பயணக்கட்டுப்பாட்டினை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டிலும் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.