Ads
தினசரி கொரோனா பாதிப்பில் உலக அளவில் பிரேசில் முதலிடம்
உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது உருமாற்றம் அடைந்து அடுத்தடுத்து அலைகளாக வந்து வைரஸ் இன்னமும் பல நாடுகளில் வீரியத்துடன் பரவி வருகிறது.
மனித குலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் போடும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால், நம்பிக்கை அளிக்கும் வகையில் தொற்று பரவல் சற்று தணிந்து வருகிறது. எனினும் முழுமையாக கட்டுக்குள் வந்தபாடில்லை.
தினசரி கொரோனா பாதிப்பில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி பிரேசில் முதலிடம் வகிக்கிறது. வோர்ல்டோமீட்டர்ஸ் தரவுகளின் படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 62 ஆயிரமாக உள்ளது. பிரேசிலில் 78 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக அர்ஜெண்டினாவில் 27 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Info
Ads
Latest News
Ads