Category:
Created:
Updated:
அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானம் ஒன்றை பிரகடனப்படுத்தியதையே தான் மேற்கொண்டதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
எரிபொருள் விலையை அதிகரிக்க மேற்கொண்ட தீர்மானம் தொடர்பில் தன் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விளக்கமளிக்க அமைச்சர் இன்று விசேட ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.
இதன்போது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்திருந்த கருத்துக்கு பதில் அளித்து அமைச்சர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
சாகர காரியவசம் தாக்குவது தன்னை அல்ல எனவும், ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உருவாக்கிய முதலாவது ஜனாதிபதிக்கும் மற்றும் பிரதமரின் தலைப்புடன் கூடிய கடிதத்தை பயன்படுத்தி பிரதமருக்குமாகும் என அவர் இதன் போது தெரிவித்தார்.