
இலங்கையில் பயணக்கட்டுப்பாடு 14ஆம் திகதி தளர்த்தப்படும்
இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகளை 14 ஆம் திகதியின் பின்னரும் நீடிப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
14 ஆம் திகதியின் பின்னர் மீண்டும் பயணக்கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே இராணுவத்தளபதி இதனைத் தெரிவித்தார்.
நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகளை 14 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்துவதற்கு ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானத்தில் இதுவரையில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. அவ்வாறு தீர்மானித்தால், அது குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்.
மாறாக 14 ஆம் திகதியின் பின்னரும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. இவை உண்மைக்கு புறம்பானவையாகும். எனவே இது குறித்து மக்கள் வீண் கலவரமடையத் தேவையில்லை என்று தெரிவித்தார்.