Category:
Created:
Updated:
இரண்டாவது தடுப்பூசிக்கான டோஸ் தற்சமயம் கிடைத்திருப்பதினால் பொதுமக்கள் தேவையற்ற அச்சததை ஏற்படுத்திக்கொள்ளத் தேவையில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
சுகாதார அமைச்சில் நேற்று (12) நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில், தற்போது 15 இலட்சத்து 50 ஆயிரம் சைனோபாம் Sinopharm தடுப்பூசி டோஸ் கிடைத்துள்ளன.
தற்போது முதலாவது தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஸ்புட்னிக் இரண்டாவது தடுப்பூசிகளும் தற்சமயம் கிடைத்துள்ளன. இந்த விடயம் பற்றி அனாவசியமாக அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம்; என்றும் அவர் மேலும் கூறினார்.