Category:
Created:
Updated:
எரிபொருள் விலையை உயர்த்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானம் ஒரு மனிதாபிமானமற்ற செயல் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பேரிடர் நேரத்தில் எரிபொருள் விலை அதிகரிப்பு மக்களை மேலும் நிலைக்குலைய செய்துள்ளதாக அவர் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை உயர்வு காரணமாக பொது போக்குவரத்து மற்றும் பேக்கரி பொருட்கள் மற்றும் அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலைகள் எதிர்காலத்தில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவித்துள்ளார்.