கிளிநொச்சி மாவட்டத்திற்கு தேவையான உரம் கையிருப்பில் இல்லை- அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்
கிளிநொச்சி மாவட்டத்திற்கு தேவையான உரம் கையிருப்பில் இல்லாத காரணத்தினால் மானியஉரத்தை வழங்க முடியாதிருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்துள்ள போதும் விவசாயிகளுக்குரிய மானிய உரம் இதுவரை வழங்கப்படாத நிலையில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ள இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் இதுவரை விவசாயிகளுக்கு மானிய உரம் வழங்கப்படவில்லை சிறுபோக செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் ஒரு பகுதியினருக்கு மாத்திரமே மானிய உரம் வழங்கப்பட்டுள்ளபோதும் அதிகபடியான விவசாயிகளுக்கு மானிய உரம் வழங்கப்படாத நிலையில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.பயிர் செய்கை மேற்கொண்டு இருபத்தொரு நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டிய உரத்தினை இரண்டு மாதங்கள் கடந்தும் இதுவரை மானிய உரம் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லைஇதனால் பெரும்பாலான விவசாயிகளின் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பாக தனியார் விற்பனை நிலையங்களில் அதிகூடிய விலைகளில் விற்பனை செய்வதற்கு ஏற்ற வகையிலேயே மானியங்களை தாமதப்படுத்தி அதிகாரிகள் வழங்கி வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.இந்த விடயம் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது மாவட்டத்தில் சிறுபோக செய்கைக்கான மானிய உரம் வழங்குவதற்கு ஏற்ற வகையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்படாமையினால் மானிய உரத்தை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது இருந்த போதும் தேவையான உரத்தை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.